சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மட்டுமின்றி ஆம் ஆத்மிக்கும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் இப்போது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசே ஆட்சியில் உள்ளது. அங்குக் காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாகவே உள்ளது இதற்கிடையே ஹரியானாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிகப்படியான இடங்களில் ...
உலகின் டாப் 20 நாடுகளின் சங்கமம் தான் இந்த G20. ஒவ்வொரு ஆண்டும் இந்த டாப் 20 நாடுகளும் சந்தித்துக் கொள்வார்கள். இந்த G20 மாநாடு எப்போதும் ஒரே இடத்தில், ஒரே நாடே நடத்தாது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில், ஒரு நாடு தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த தலைவர் நாடு தான், அடுத்த ஆண்டுக்கான ...
இந்துார்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதலுக்கு மத்தியில், ‘கட்சிக்காக கடினமான முடிவுகளையும் எடுக்க தயங்கமாட்டோம்’ எனக்கூறி காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் எச்சரித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. சமீபத்தில் சச்சின் ...
பழநி: பழநி முருகன் கோயிலில் தினமும் 5,000 பக்தர்களுக்கு தலா நூறு மி.லி. சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் வருகை ஒரு வாரமாக அதிகரித்துள்ளது. அதிகாலை 4.30 ...
சென்னை: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதி ஆகியுள்ளது. இதனால், நிலுவையில் உள்ள மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நவீன காலத்தில் இணைய ...
சென்னை: திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவில் ஆற்காடு வீராசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட 19 நிர்வாகிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, திமுகவில் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக சட்ட விதிகளின்படி, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக ...
கோவையில் புதிய வகை போதைப் பொருள் விற்ற இரண்டு பேர் கைது கோவை மாவட்டம் மதுவிலக்கு பிரிவு போலீசார் தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது. அப்பொழுது அங்கு வந்த சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னும் முரணாக பதில் ...
கோவையில் ஆற்று மணல் கடத்தல்: செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி கோவையின் புறநகர் பகுதியான நல்லூர்வயல் காருண்யா அருகே உள்ள சப்பானிமடை கிராமத்தில் சிறு துளி அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இருந்து பெருமாள் கோயில் பதி பண்ணை தோட்டத்திற்கு 50 க்கும் மேற்பட்ட லாரிகளில் ...
கோவை பழைய இரும்பு பொருட்கள் குடோனில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம் கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் அரசு பணியாளர் குடியிருப்பு அருகே பழைய இரும்பு பொருட்கள் குடோன் உள்ளது. மாநகரில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் பல லட்சம் மதிப்பிலான பழைய பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் திடீரென ...
புனே: சீரடி ஸ்ரீசாய்பாபா கோயில் அறக்கட்டளைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடி வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானை ஒரு மத அறக்கட்டளையாக ஏற்று, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ளது சீரடி சாய்பாபா கோவில். மும்பையிலிருந்து 300 ...













