கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள வடக்கலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் வேலுசாமி ( வயது 44) விவசாயி. இவர் நேற்று ஓதிமலை -அன்னூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மொபட் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். ...

கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதே போன்று லாலி ரோடு சிக்னல் பகுதியிலும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. உழவர் சந்தை அருகே சாலை விரிவாக்கத்திற்காக மண்மேடுகள் தோண்டப்பட்டு, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையினாலும், சாலை விரிவாகத்திற்காக தோண்டப்பட்டிருந்த குழியாலும் ...

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாத் அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வரும் 31-ந் தேதி விநாயகர் ...

கோவை: வீரமங்கை வேலுநாச்சியாா் குறித்த இசையாா்ந்த நாட்டிய நாடகம் கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டமாக தமிழக அரசு சாா்பில் வரலாற்று சிறப்பு மிக்க வீரமங்கை வேலுநாச்சியாா் குறித்த இசையாா்ந்த ...

கோவை:வருகிற 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.இதை யொட்டி இந்து அமைப்புகள் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.பின்னர் இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளங்களில் கரைக்கப்படுகிறது. கோவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து கடந்த வாரம் முஸ்லிம் அமைப்புகளுடன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணா ...

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையருகே நேற்று ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் ...

அதிமுக என்னும் கட்சியை காப்பாற்ற ஒபிஎஸ் பின்னால் தொண்டர்கள் அணிவகுக்க வேண்டும் என மருது அழகுராஜ் வலியுறுத்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- அஇஅதிமுகவின் தலைமையை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்” என்னும் கழக நிறுவனர் புரட்சித்தலைவரின் மாற்றவே கூடாத அடிப்படை விதியை தன் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றி தொண்டர்களை புறந்தள்ளிவிட்டு ...

அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என நடிகர் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ்சை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாக்கியராஜ் இவ்வாறு கூறினார். அதிமுகவிற்கு உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ...

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் விரைவில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து ...

அதிமுகவின் பரம எதிரி என்று சொல்லப்படும் திமுகவுக்கு ஆதரவாக ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி., தமிழக முதல்வரையும், திமுக அரசையும் புகழ்ந்து பேசியது அமைந்தது. மேலும், சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும் ஓபிஎஸ் நடவடிக்கை இருப்பதாக கூறி, அதிமுகவுக்கு ஒற்றை ...