வரலாறு காணாத வெள்ள பாதிப்பைச் சந்தித்துள்ள பாகிஸ்தானில் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை மாத இறுதியில் தொடங்கிய பருவமழையானது கடந்த இருவாரங்களாக வரலாறு காணாத சீற்றத்துடன்பொழிந்து கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள பாதிப்பானது சிந்த், பலுசிஸ்தான், கைபர்பக்துன்கா ஆகிய மாகாணங்களில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ...

முருகப்பா குழுமத்தின் 3 சக்கர மின்வாகனத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் முருகப்பா குழுமம் சார்பில் மின்சார ஆட்டோவை அறிமுகம் செய்தார். முதலமைச்சர் முக ஸ்டாலின். மின் பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோ ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை தலைமை செயலகத்தில் ...

புஜ்: குஜராத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்க சதி நடந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் புஜ் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மோடி அதன்பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது. இந்தியா மட்டுமின்றி உலக அரங்கிலும் குஜராத் மாநிலத்தின் பெருமைக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க சதி நடைபெற்றது. மேலும், இந்த மாநிலத்துக்கு வரும் முதலீடுகளை நிறுத்தவும் ...

புதுடெல்லி: கடந்த 2019-ல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனுடன் இணைந்திருந்த லடாக்கை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது பாஜகவிற்கு சாதகமாகி உள்ளது. இதனால், நேற்று முதல் ஜம்மு-காஷ்மீரின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...

தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ள அமெரிக்கா தனது இரண்டு போர் கப்பல்களை தைவான் ஜலசந்தி வழியாக அனுப்பியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவான் தன்னை தனி நாடாகவே கருதி வருகிறது. ஆனால் சீனாவோ தைவானை தங்களது எல்லைக்குட்பட்ட பிராந்தியம் என்று சொல்லி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் எதிர்ப்பையும் ...

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் அருகே யுகேஜி மாணவி ஒருவரை பள்ளி தாளாளரின் கணவர் சாக்லேட் வாங்கிக் கொடுத்து ...

புது டெல்லி: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களான அகமதாபாத், மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு நகரங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடி உள்ளனர். பிரதமர் மோடியும் இந்திய அணிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு ...

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17, அன்று நடைபெறும் என செய்தி வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக அக்கட்சியின் சார்பில் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ...

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள். குறிப்பாக, சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை ...

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களின் படகுகளை அடித்து சேதப்படுத்துவதுடன், வலைகளை அறுப்பதையும் ...