தமிழ் சினிமாவின் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனாகவும் தற்போது சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர். இதனிடையே இவர் பதவியேற்றதிலிருந்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். மேலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் திரையரங்கு வினியோகஸ்தர் உரிமையையும் ...

சென்னை: பாஜக சிறுபான்மையினர் அணி நிர்வாகி டெய்சி சரணிடன்,பாஜக ஓபிசி அணி நிர்வாகி திருச்சி சூர்யா தொலைபேசியில் ஆபாசமாக பேசிய விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண்க்கும் OBC அணியின் மாநில ...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ...

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை அடித்துக் கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை – கோவை நீதிமன்றம் தீர்ப்பு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சித்திரைவேல் இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே பகுதியில் அவருடைய அண்ணன் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வெள்ளலூரைச் ...

வனத்துறை எச்சரிக்கை:  அலட்சியப்படுத்தும் தி.மு.க வினர் கோவையில் செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் கோவை மருதமலையில் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் அடிவார பகுதியில் இருந்து மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி இல்லை. காட்டு யானைகள் நடமாட்டம் மற்றும் வன விலங்குகள் அங்கு குடிநீர் மற்றும் உணவுக்காக மருதமலை வனப் பகுதியில் சுற்றி திரிவது ...

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். கோவை கணபதி அருகே உள்ள சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். தொழிலாளி இவருக்கு திருமணம் முடிந்த மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிப் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம் தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் குடித்து வந்துள்ளார். இதற்கிடையே அவர் கடந்த ...

கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் அருகே கடந்த 1-ந் தேதி பதுவம்பள்ளியை சேர்ந்த முகுந்த ராஜேஷ் (வயது 22) என்பவர் தனது 4 நண்பர்களுடன் நடந்து சென்றார். அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சுபாஷ் (22) என்பவர் அவர்கள் மீது உரசியபடி சென்றதாக தெரிகிறது. இதை முகுந்த ...

கோவை: அரியலூர் மாவட்டம் மகாலிங்கபுரத்தை சேர்ந்த 37 வயது கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தொழிலாளி கடந்த ஒரு ...

கோவை: புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது சாலிக் (வயது 39). இவர் சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் அதிகாலை 4.30 மணிக்கு வந்து இறங்கினார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது 200 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மேல் விசாரணைக்காக அழைத்தனர். அப்போது அவர் ...

கடந்த மாதம் 23 ஆம் தேதி கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதை அடுத்து கோட்டைமேட்டில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 கிலோ வெடி மருந்துகள், 109 பொருட்களை கைப்பற்றினார்கள். இந்த வழக்கு தொடர்பாக ஜமேஷா முபின் உறவினர் உட்பட ஆறு ...