கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 6 பேர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்- தீவிர விசாரணை..!

கடந்த மாதம் 23 ஆம் தேதி கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதை அடுத்து கோட்டைமேட்டில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 கிலோ வெடி மருந்துகள், 109 பொருட்களை கைப்பற்றினார்கள். இந்த வழக்கு தொடர்பாக ஜமேஷா முபின் உறவினர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இந்த வழக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜமேஷா முபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சல்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஆறு பேர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி முன்பு கோவை மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தற்பொழுது ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.