கோவை: நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேட்டுப்பாளையத்தில் அதை தொடங்க இருந்த நிலையில், கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயிலில் அவர் பூஜை செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், டெல்லி பனிமூட்டத்தால் நட்டாவின் இந்த பயணம் தாமதமானதால் அவரால் கோட்டை ஈஸ்வரன் கோயில் செல்ல முடியவில்லை. ...

திருவள்ளூர்: முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா 2-வதுஅறுவை சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சிறுமியிடம், முதல்வர் ஸ்டாலின், அலைபேசி மூலம் நலம் விசாரித்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், இவரது மனைவி சவுபாக்யா. இத்தம்பதியின் மகள் டானியாவுக்கு, அறிய வகை முகச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. ...

தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தகவல். நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநில அளவில் மாநாடு நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாநில அளவில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் ...

சென்னை: தமிழக சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு நிலை சரியில்லை என்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம், கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விவகாரம், திருச்சி ராம ஜெயம் ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 62))அந்தப் பகுதியில் 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜினி (வயது 60)) இவர்களுக்கு சுரேஷ்குமார் ( வயது 34) என்ற மகனும் நித்திய பிரியா (வயது 33) என்ற மகளும் உள்ளனர். ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை இ.பி. காலனியை சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மகன் சதீஷ்குமார் (வயது 17) அங்குள்ள தனியார் பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ 3-வது ஆண்டு படித்து வந்தார்.நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், மகேஷ் அரவிந்த், சஞ்சய், ஆகியோருடன் காக்கவராயன்மலைப்பகுதியில் உள்ள கல்லு குழிக்கு குளிக்க சென்றார்கள்.ஆனந்தமாக குளித்துக் ...

கோவை காந்திபுரம், 5-வது வீதியை சேர்ந்தவர் முருகாசலம். இவர் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் ஸ்ரீபதி(வயது17). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.எஸ்சி (ஐ.டி) முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரத்தினபுரியை சேர்ந்த இவரது நண்பர் ஸ்ரீஹரி(வயது 17) இவர் பெங்களூரில் உள்ள ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பொகலூர், முடுகதுறையை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 48) கட்டிட வேலை செய்து வந்தார்.இவர் நேற்று காரமடை தேரம்பாளையத்தில் உள்ள மல்லிகா என்பவரது வீட்டில் கட்டிடவேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது அருகில் உள்ள மின் பெட்டியில் இவரது கை தவறுதலாகப்பட்டு தூக்கி வீசப்பட்டார் .இவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ...

கோவை சிங்காநல்லூர்,நீலி கோணாம் பாளையத்தில் உள்ள நேதாஜிபுரம், விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 37 ) இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மனித வளம் மேம்பாட்டு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றிருந்தார் . நேற்று இவரது வீட்டின் பூட்டு ...

கோவை: வடகோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...