சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்பட தமிழகத்தில் 5 கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில் பக்தர்களுக்கு ...

திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘தமிழகத்தில் சுய உதவிக் குழுக் களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் வழங்கப்பட உள்ளது. தற்போது தள்ளுபடி செய்த கடன்களுக்குரிய தணிக்கை பணி பாதி முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிடும். ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் சுய உதவி குழுக்களுக்கான ரூ.2 ஆயிரத்து ...

கர்நாடக மாநிலம் உதயமான தினமான நேற்று கர்நாடக ராஜயோத்சவா என்கிற நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டது. பெங்களூருவில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்குகர்நாடக ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் புனீத் ராஜ்குமாரின் மனைவியிடம் கர்நாடக ரத்னா விருதை ...

வெள்ள நீர் காரணமாக சென்னையில் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவு பகல் என கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து 2 சுரங்கப் ...

பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பின்னால் பஞ்சாப் தாதாவான பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை, கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அவர்களுக்கு ...

கன்னட சினி உலகில் முக்கிய நடிகராக இருந்தவர்தான் புனித் ராஜ்குமார். கடந்த 2021 அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு தன்னுடைய 46 வயதில் உயிரிழந்த நடிகர் திடீரென அவர் மரணமடைந்தது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது ரசிகர்களால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவரது கலைப்பணி, சமூக சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் ...

இந்தியாவில் புதிதாகப் பசுமை நெடுஞ்சாலையை நாக்பூரிலிருந்து புனே வரை 700 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய சாலையைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளனர். மனிதன் வளர்ச்சியைச் சந்தித்தது என்பது அவன் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பயணிக்கத் துவங்கிய பிறகுதான். பயணம் என்பது ஒருவருக்குப் பலவிதமான அனுபவங்களைத் தரக்கூடியது. பயணம் எவ்வளவு ...

புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது புதுச்சேரியில் வாழ்ந்த தலைவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி பிரஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியை நவம்பர் 1 , 1954இல் மீட்டெடுத்து இந்திய தேசத்துடன் இணைக்கப்பட்டதாக பறைசாற்றினார்கள் இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களும் மக்களும் தற்போது ...

புதுச்சேரி கடற்கரை சாலையில் புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது காவல்துறை மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதோடு புதுச்சேரி மாநிலம் ஓர் அமைதியான மாநிலமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது . இதனால் புதுச்சேரிக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து ...

கோவையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மூன்று குட்டிகள் கொண்ட யானை கூட்டம்… கோவை மருதமலை அருகே ஐ.ஓ.பி காலனி குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு 3 குட்டிகள் உள்பட 5 யானை கூட்டம் மாலை 7 மணி அளவில் புகுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக இது குறித்து வனத் துறைக்கு தகவல் ...