கோவையில் அதிர்ச்சி… தொடர் திருட்டில் ஈடுபட்ட 13,14 மற்றும் 15 வயது சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது..!

கோவை போத்தனூர் பகுதியில் அடிக்கடி திருட்டு நடந்து வந்தது .இதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்து. இவர்கள் வெள்ளலூர் அவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த முகமத் சாகிப் (வயது19)மேலும் 13 வயது, , 14வயது 15 வயது சிறுவர்கள் 3 பேரை நேற்று கைது செய்தனர்.இவர்களிடமிருந்து 2 ஏ.டி.எம். கார்டு 2ஆதார் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் அங்குள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது. சிறுவர்கள் 3 பேரும் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.