திருமணம் நிச்சியமான இளம்பெண் காதலனுடன் ஓட்டம்..!

கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண். பி.பி.ஏ., பட்டதாரியான இவர் தற்போது தையல் வகுப்புக்கு சென்று வந்தார்.

இளம்பெண் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் படித்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளிடம் இளைஞருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். பின்னர் கடந்த மாதம் 28-ந் தேதி வாலிபர் ஒருவரை மணமகனாக பார்த்து திருமணம் செய்வது என நிச்சயம் செய்தனர்.

சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் தையல் வகுப்பு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.

இது குறித்து அவர்கள் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணம் நிச்சயமான இளம்பெண் தனது முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.