மத்திய இணை அமைச்சர் முருகன் உடன் புதுச்சேரி மீனவர்கள் சந்திப்பு..!

புதுச்சேரி நவம்பர் 5 சோலைநகரில் மீனவர்களுடன் சந்திப்பு நிகழ்வு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் L முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

உணவு வழங்கல் துறை அமைச்சர் சாய் J சரவணன் குமார் பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு பாஜக மீனவர் பிரிவு அமைப்பாளர் பழனி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் மக்களிடம்
தூண்டில் வளைவு அமைக்கும் கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும். சுதந்திரம் அடைந்த பிறகு மீனவ மக்கள், மீனவத்துறைக்கு தனி அமைச்சகம் கோரினர். முன்பு காங்கிரஸ்-திமுக கூட்டணி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. பாஜக ஆட்சி அமைத்த பிறகு தனி அமைச்சகத்தை பாரத பிரதமர் மோடி உருவாக்கினார். மீனவ கிராமங்களில் அடிப்படை வசதி பெருக்கவும், வேலைவாய்ப்பு உருவாக்கவும் ரூ. 5 ஆயிரம் கோடியையும் ஒதுக்கினார். மீன்வளத்துறைக்கு அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்த ரூ.7500 கோடி ஒதுக்கி பணிகள் நடக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் 32,500 கோடி மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பெரிய மீன்பிடித்துறைமுகங்களை மேம்படுத்தி வருகிறோம். ரூ. 120 கோடியில் கடல்பாசிக்காக பூங்காவை ராமநாதபுரத்தில் அமைத்துள்ளோம். நாட்டுப்படகை ஆழ்கடல் படகாக மாற்ற 60 சதவீதம் மானியத்தை தருகிறோம். ரூ. 1.2 கோடி மதிப்பிலான இரு படகை புதுச்சேரிக்கு ஒதுக்கியுள்ளோம். இரண்டு ஆண்டுகளில் ரூ.218 கோடியை புதுச்சேரி மீனவர்களுக்காக ஒதுக்கியுள்ளோம். கரோனாவுக்கு பிறகு மீன்கள் ஏற்றுமதி 32 சதவீதம் அதிகரித்துள்ளது. மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் பேசுகையில், “மீனவர்கள் சமுதாய மக்கள் வளர்ச்சி அடையாமல் இருந்தனர். தற்போது புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி வந்துள்ளது. மீனவ சமூக மக்கள் முன்னிலைப்படுத்துவார்கள். அவர்களுக்கான பங்களிப்பு சிறப்பாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பேசுகையில், “புதுச்சேரியில் முதியோர் பென்சன் மாதந்தோறும் சரியான நேரத்தில் கிடைக்க செய்துள்ளோம். மீனவர்களுக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்திப்பவர்கள் காங்கிரஸ்-திமுக கட்சியினர். தற்போது மீனவர் பகுதிக்கு மத்திய அமைச்சரையே அழைத்து வந்துள்ளோம். 30நாட்களுக்குள் பிரச்சினையை மத்திய அரசு தீர்க்கும். மீதமுள்ள மூன்றரை ஆண்டுகளில் மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் புதுச்சேரி தேசிய ஜனநாயக்கூட்டணி அரசு தீர்க்கும். மீனவ நண்பராக ஒரு காலக்கட்டத்தில் எம்ஜிஆர் இருந்தார். தற்போது இந்தியா முழுக்க மீனவ நண்பராக பிரதமர் மோடியாக உள்ளார்.” என்று குறிப்பிட்டார்.

மத்திய இணை அமைச்சர் மீனவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் வரவேற்பு ஏற்பாட்டினை மிகவும் சிறப்பாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் திரு செந்தில்குமார் அவர்கள் செய்திருந்தார்..