வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட வைக்கும் கும்பலிடமிருந்து உஷாராக இருக்க வேண்டுமென காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார். தாய்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை நம்பி தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் சம்பந்தப்பட்ட முகவர்களிடம் ஒன்றரை ...

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்துள்ள தடை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு. கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி, கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா இருவரும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். ...

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் தங்களுடைய மகனை மீட்டுக் ...

சென்னை: கடந்த 5 மாதங்களில் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான பொருட்களை ரயில்வே போலீஸார் மீட்டனர். அவற்றை டிஜிபி சைலேந்திரபாபு உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைத்தார். தமிழகம் முழுவதும் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட நகைகள், செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சென்னை பெரம்பூர் ரயில்வே திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. திருச்சி, சென்னை ரயில்வே ...

கேரளத்தில் தமிழ் பெண் உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பெண் 49 வயதான ரோஸ்லி மற்றும் தமிழ்நாட்டின் தர்மபுரியை சேர்ந்த 52 வயதான பத்மா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஹீலர் பகவல் ...

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட மொத்தம் 12 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த V . கோவிந்தராஜ் Ex MLA, (கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர்) KE ...

கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள கொண்டசாமி நாயுடு வீதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது 18 வயது மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7 – ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவரது மகள் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது . இது ...

தமிழக – கேரள எல்லையான மாங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், அதற்காக வேறு பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கிச் செல்ல அன்னூர் பகுதிக்கு சிலர் வர உள்ளதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அன்னூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ...

கோவை ரத்தினபுரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது ரத்தினபுரி சம்பத் வீதி பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமான வகைகள் நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்த விற்பதற்காக நின்று கொண்டு இருந்தது ...

பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நடத்தப்படுகிறது. தொழில் வாய்ப்புகள், தொழில் நேரடி செயல் முறை பயிற்சிகளை ஊக்குவிக்க திறன் இந்தியா திட்டம் எனப்படும் ஸ்கில் இந்தியா மிஷன் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் ...