கோவையில் சட்ட விரோதமாக கூடிய பா.ஜ.கவினர் 40 பேர் மீது வழக்கு..!

கோவை சரவணம்பட்டி வி.கே ரோடு- வி.ஆர் மருத்துவமனை ரோடு சந்திப்பில் சாலை வசதி அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பாஜகவினர் நேற்று சட்ட விரோதமாக கூடினார்கள்.அங்கு விரைந்து சென்ற சரவணம்பட்டி போலீசார் பா..ஜ.க மண்டல தலைவர் ரத்தினசாமி ,வார்டு தலைவர் வினோத்,மண்டல மகளிர் அணி செயலாளர் சிந்துஜா,மண்டல துணைத் தலைவி தீபிகா சாமிநாதன்,,பிரேமா, ரேகா கார்த்திகா, ருக்மணி உட்பட 40 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.