பொள்ளாச்சியில் பதுக்கி வைத்திருந்த 43 கிலோ குட்கா பறிமுதல் – ஒருவர் கைது..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையில் போலீசார் பொள்ளாச்சி- மீன்கரை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா,புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக ஆனைமலையைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவரது மகன் அபுல்கலாம் ஆசாத் (41) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 43 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.போதை பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அழித்து அவர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனையாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியிருப்பதாவது:-
இது போன்ற போதை பொருள் .விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் .கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.