தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ? சிலர் மாய தோற்றத்தை உருவாக்க முயற்சி – அமைச்சர் மனோ தங்கராஜ்
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பட்ட நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2030 க்குள் தமிழக முதல்வர் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் எட்ட வேண்டும் என முடிவெடுத்து இருபதாக கூறினார். கோவை மாநகரம் மிகச் சிறந்த வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு சேட்டட் அக்கவுண்ட்ஸ் தேவை உள்ளது என கூறினார். தமிழகத்தில் ஒரு சிலர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது போன்று மாயத் தோற்றத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்கிறார்கள். அது தோற்றுப் போகும் எனவும் கோவை மாவட்டத்தில் மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார். தமிழக முதல்வர் நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தி திறன் மேம்பாட்டிற்கு முக்கிய கவனத்தை செலுத்தி வருகிறார். பிற நாடுகள் பிற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகத்தில் உள்ள மின் கட்டணம் நியாயமான மின் கட்டணம் தான் என கூறினார்.
Leave a Reply