நடிகை சன்னி லியோனுடன் படம் நடித்தது சிறப்பான அனுபவம்: தன்னை பார்த்து க்யூட் எனக் கூறியது சிலாகித்துப் போனேன் – ஜி.பி.முத்து 

நடிகை சன்னி லியோனுடன் படம் நடித்தது சிறப்பான அனுபவம்: தன்னை பார்த்து க்யூட் எனக் கூறியது சிலாகித்துப் போனேன் – ஜி.பி.முத்து 

கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், டிக் டாக் மூலம் அறிமுகமாகி ஊடகங்களின் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் திரைத்துறையில் சிறந்த ஒத்துழைப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.பிக் பாஸ் அனுபவம் சிறப்பாக இருந்ததாகவும் பிக் பாஸ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது மிக பெரும் பாக்கியம் எனவும் தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் பிக் பாஸை விட்டு வெளியேறியதாகவும் கூறினார். தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் நடிகை சன்னி லியோனுடன் திரைப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி எனவும் கூறியதுடன் தான் அவரைப் பார்த்து ஐ லவ் யூ கூறியவுடன் அவர் தன்னை பார்த்து கியூட் என கூறிய போது சிலாகித்து போனதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கோவையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் உடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றது குறித்த கேள்விக்கு, இதுவரை தான் யாருடனும் அது போன்ற வேகத்தில் சென்றதில்லை எனவும் இந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் செல்ல மாட்டேன் எனவும் கூறினார்.