கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிபுர்ரகுமான் ( வயது 22) இவர் கடந்த 6மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். வெள்ளலூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று இவர் வேலை முடிந்து கோண வாய்க்கால் பாளையம் டாஸ்மாக் பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது 3பேர் இவரை வழிமறித்து, தாக்கி அவரிடமிருந்த செல்போன் பணம் ரூ 6,500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்.
Leave a Reply