சென்னை : பாஜக நிர்வாகிகள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தமிழகம் திரும்பிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு, கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர். முன்னதாக, பாஜக நிர்வாகிகள், பத்திரிகையாளரை தாக்க முயன்ற சம்பவம் ...

முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் சார்பாக கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மூர்த்தி நகர செயலாளர் தளபதி 9 பகுதி செயலாளர்கள் 52 வட்டச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் புறக்கணித்தனர் அமைச்சரை சார்ந்த மத்திய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பெரும்பாலும் பங்கேற்றார்கள். இதன் ...

வாஷிங்டன்: உலகின் டாப் 20 பொருளாதாரங்களை உள்ளடக்கி உள்ள ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்கும் நிலையில், இது தொடர்பாக முக்கிய கருத்துகளைச் சர்வதேச நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்து உள்ளார். வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஓராண்டிற்கு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வரும். ஜி-20 என்பது சர்வதேச அளவில் ...

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மு க ஸ்டாலின், பொதுக்குழு கூட்டத்தில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார். அதில், “மழை பெய்தாலும் என்னை தான் திட்டுகிறார்கள், மழை பெய்யவில்லை என்றாலும் என்னை தான் திட்டுகிறார்கள். ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்தவுடன், இன்று கட்சிக்காரர்கள் என்ன பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே எழுந்திருக்க ...

கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி அலுவலகம் முன்பு பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தினர் 3 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், குறைந்தபட்ச திபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு., ஹெச் எம் எஸ்., எம்.எல் எஃப்., ஐ.என்.டி.யு.சி., என்.டி.எல்.எஃப்., அம்பேத்கர் யூனியன், ஏ.டி.பி., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 8 அமைப்புகளை சேர்ந்த ...

கோவை துடியலூர் அருகே உள்ள என் .ஜி.ஜி. ஓ காலனி, அமராவதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள்  கீர்த்திகா( வயது 18) கோவையில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாய் ஈஸ்வரி துடியலூர் போலீசில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் உள்ள 12-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக சாலை ஒன்று இருந்தது. ஆனால் அந்த சாலை கடந்த சில மாதங்களாகவே பழுதடைந்து காணப்பட்டது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டதோடு, பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத நிலையும் ...

கோவை மாவட்டத்தில் சிறு,குறு தொழில் நிறுவனங்கள், ஐ.டி.நிறுவனங்கள், நூற்பாலைகள், என எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெளி மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.இதுதவிர கோவையில் ஏராளமான கல்லூரிகளும் உள்ளன.இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை போன்ற பகுதிகளில் விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் பவானி ஆறு செல்வதால், அங்குள்ள விளை நிலங்களில் விவசாயிகள் நேந்திரன், கதளி, செவ்வாழை, பூவன் உள்ளிட்ட வாழைகளை பயிரிட்டு வருகின்றனர். காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கத்தரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, புடலங்காய், சுரக்காய், பூசணிக்காய், ...

ஊட்டி: போக்குவரத்து போலீசார் அடிக்கடி கோத்தகிரி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள். அந்த வகையில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் கோத்தகிரி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ...