கோவையில் விளைநிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகள்..!

கோவை அருகே உள்ள பேரூர் பச்சாபாளையம்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து காட்டுயானைகள் இன்று புகுந்தது. 2குட்டி யானைகள் உட்பட மொத்தம் 7 யானைகள் இன்று அங்குள்ள விளை நிலத்துக்குள் புகுந்து சோளபயிர்களை சேதப்படுத்தியது.இதை பார்த்த விவசாயிகள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் வரைந்து வந்து காட்டுக்குள் யானைகளை துரத்தினார்கள்.இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.