ஜி20-யின் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா-பிரதமர் மோடி லோகோ வெளியீடு..!

டெல்லி: 2022 டிசம்பர் 1 முதல் ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. பிரதமர் மோடி அதற்கான லோகோ வெளியிட்டார்.

நாடு முழுவதும் பல இடங்களில் வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்த உள்ளது. ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது வரலாற்று தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகை ஒன்றிணைத்து கொண்டு வரும் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை லோகோவில் உள்ள தாமரை குறிக்கிறது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, தென் கொரியா, பிரேசில், அர்ஜெண்டினா, மெக்சிகோ ஆகிய நாடுகள் ஜி20 கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளது. இந்தியா முதன் முதலாக ஜி20 மாநாட்டில் 1999-ம் ஆண்டு உறுப்பினராக ஆனது. 2014 – ம் ஆண்டு முதல் இந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு ஜி20 மாநாடு இத்தாலியில் நடைபெற்று முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜி20-யின் மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.

அதையோட்டி 2022 டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. அதன் அடிப்படையில் ஜி20-யின் தலைமை பொறுப்புக்கான லோகோ மற்றும் இணையதளத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இந்த லோகோ என்பது ஒரு தாமரை மலர்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் இது குறித்து பேசிய போது இந்த உலகம் எத்தனையோ சவால்களுக்கு மத்தியிலும், கொரோனா பெருந்தொற்று போன்ற இடர்பாடுகள் மத்தியிலும் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

சூழல் மோசமானதாக இருந்தாலும் ஒரு நம்பிக்கையை வெளிபடுத்தும் விதமாக லோகோவில் தாமரை இதழ்கள் அமைந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை இந்தியா தலைமை வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைப்பு அதிகாரியாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்