மாறிவரும் காலநிலையின் கீழ் பெரும்பாலான பூச்சி மக்கள் அழிந்துவிடும் என்பதைக் குறிக்கிறது. இந்த கிரகத்தில் 65 சதவீத பூச்சிகள் அடுத்த நூற்றாண்டில் அழிந்து போகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேச்சர் க்ளைமேட் சேஞ்ச் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், வெப்ப அழுத்தத்தினால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் விலங்குகளின் எண்ணிக்கையை சீர்குலைக்கும். மேலும் அழிவு அபாயத்தை ஊக்குவிக்கும். ...
எதிரும் புதிருமாக ஆகிவிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் இருவரையும் அருகருகே ஒன்றாக நிற்க வைத்து பூங்கொத்தை வாங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இரு அணியாக பிரிந்து நிற்கின்றார்கள். ஏற்கனவே டிடிவி தினகரன் ஒரு அணியாகவும் சசிகலா ஒரு அணியாகவும் பிரிந்து ...
கோவை ஆர்.எஸ்.புரத்தில் திருமண நகைக் கண்காட்சி.. புதுசா இருக்குல்ல..! எடுங்க வண்டிய.. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பி.எம்.ஜே ஜூவல்ஸ் நிறுவனத்தில் திருமணத்திற்கான நகை கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகில் பி.எம்.ஜே ஜூவல்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் இன்று முதல் வரும் 21ம் ...
திண்டுக்கல்: காந்தி கிராம பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார். அப்போது அவருக்கு பாஜக மற்றும் திமுக கட்சியினர் கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் போட்டி போட்டு வரவேற்பு அளித்தனர். இதனால் சென்னையைவிட திண்டுக்கல்லில் மோடியை வரவேற்க மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமத்தில் காந்தி கிராம ...
திண்டுக்கல்லில் நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை. திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இனநேற்று று தமிழகம் வந்தடைந்தார். பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்து மதுரையிலிருந்து ...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு 6 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நளினி, முருகன், சாந்தனு, பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ...
சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம் என ஈரோட்டில் நடந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற ஈரோடு தெற்கு மாவட்ட கழகத் துணை செயலாளர் செந்தில்குமார் இல்லத்திருமண விழா மேட்டுக்கடையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினார். ...
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது நாளை (12 ஆம் தேதி) தமிழகம்-புதுச்சேரி கடற்கரை இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையைக் கடந்த பின்னர் அரபிக்கடலை நோக்கி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...
சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 10 நாட்களாக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிப்பால் 10.30 மணி அளவில் 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. புழல் ஏரியில் நீர் ...
கோவை சுண்டக்கா முத்தூர் பகுதி சேர்ந்தவர் நிரோஜ் குமார். அதிமுக தொண்டர் . இவர் புதிதாக ஒரு ஆட்டோ வாங்கினார். அந்த ஆட்டோவை எடுத்துக் கொண்டு கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் ஆசி வாங்க சென்றார். மேலும் சாவியை அவரிடம் கொடுத்து புதிதாக வாங்கிய ஆட்டோவை ஓட்டி தனக்கு ஆசி ...













