எதிரும் புதிருமாக இருந்த ஓபிஎஸ் – இபிஎஸ்-சை அருகருகே நிற்க வைத்த பிரதமர் மோடி – மாஸ்டர் பிளான்..!

திரும் புதிருமாக ஆகிவிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் இருவரையும் அருகருகே ஒன்றாக நிற்க வைத்து பூங்கொத்தை வாங்கி இருக்கிறார் பிரதமர் மோடி.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இரு அணியாக பிரிந்து நிற்கின்றார்கள். ஏற்கனவே டிடிவி தினகரன் ஒரு அணியாகவும் சசிகலா ஒரு அணியாகவும் பிரிந்து நிற்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் வேறு பிரிந்து நிற்பதால் பெரிதும் கவலைப்பட்டது பாஜக தான் என்கிறார்கள்.

அதிமுக இப்படிஆளுக்கு ஒரு திசையில் நின்றால் வாக்குகள் நாலாபுறமும் சிதறிவிடும். வெற்றி வாய்ப்பு பறிபோய்விடும் என்று பாஜக தொடர்ந்து கவலைப்பட்டு வருவதாக தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. அதிமுகவின் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விரும்புவதாக அடிக்கடி தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து வருகிறார். அவரின் ஆதரவாளர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, பன்னீர் செல்வத்துடன் இனி இணைவதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை என்று கறாராக சொல்லி வருகிறார். அவரது ஆதரவாளர்களும் அதையே சொல்லி வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் ஒன்று படாததால் பிரதமர் மோடி இருவரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார். கடந்த முறை பிரதமர் மோடி சென்னை வந்த போது இருவரும் சந்திக்க அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் பிரதமர் வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார். பிரதமர் புறப்படும் போது பன்னீர்செல்வம் வழி அனுப்பினார். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நடந்த 36 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி – ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார்கள். ஆனால் பிரதமர் மோடி இருவரையும் தனியாக சந்தித்து பேச நேரம் ஒதுக்கவில்லை .