சங்க காலத்திலேயே தமிழர்களின் உணவு முறை தான் மிகவும் சத்து வாய்ந்தது- திண்டுக்கல்லில் பிரதமர் மோடி புகழாரம்..!

திண்டுக்கல்லில் நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை.

திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இனநேற்று று தமிழகம் வந்தடைந்தார். பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்து மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் பிரதமர் வந்தடைந்தார்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மோடி, விழாவில் பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது, இந்த விழாவில் பங்கேற்பது உற்சாகம் அளிக்கிறது, கிராமம் மற்றும் நகரம் வித்தியாசம் இல்லாமல் கிராமங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. காந்தியின் குறிக்கோள் கிராமத்தின் வளர்ச்சியாக இருந்தது..

தமிழகத்தின் மொழி கலாச்சாரத்தை கொண்டாட காசி நகரம் தயாராக இருக்கிறது. கதர் ஆடை சர்வதேச அடையாக வளர்ந்துள்ளது. இளைஞர்கள், தேசத்தின் ஒற்றுமை காக்க வேண்டும், மேலும் இயற்கை வேளாண்மை பாதுகாப்பது இளைஞர்களின் கடமையாக கொள்ளவேண்டும்.

சங்க காலத்திலேயே தமிழர்கள் உணவு முறையில், சத்துமிகுந்த உணவுகளை சேர்த்து வந்தனர். தமிழ்நாடு, சுதேசி இயக்கத்தின் மையமாக இருந்து வந்தது. சூரிய ஒளி சக்தி பயன்பாடுகள் கடந்த சில ஆண்டுகளில் 24% அதிகரித்துள்ளது.