கோவை ஆர்.எஸ்.புரத்தில் திருமண நகைக் கண்காட்சி.. புதுசா இருக்குல்ல..! எடுங்க வண்டிய..

கோவை ஆர்.எஸ்.புரத்தில் திருமண நகைக் கண்காட்சி.. புதுசா இருக்குல்ல..! எடுங்க வண்டிய..

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பி.எம்.ஜே ஜூவல்ஸ் நிறுவனத்தில் திருமணத்திற்கான நகை கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது.

கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகில் பி.எம்.ஜே ஜூவல்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை திருமண நகைகளுக்கான பிரத்தியேக கண்காட்சி நடைபெறுகிறது.

இதன் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை பிரபல உடற்தகுதி சிகிச்சை நிபுணர் ஜெயா மகேஷ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பி.எம்.ஜே ஜூவல்ஸ் நிர்வாகத்தின் சார்பாக, கிரண் ஷிண்டே, செந்தில்குமார் நடராஜன், கலந்து கொண்டு கண்காட்சியில் பங்கு பெறும் நகைகளை காட்சிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஜெயாமகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தென்னிந்தியாவில் உள்ள பெண்கள், மிகவும் விரும்பி அணியக்கூடிய நகைகள் இதுவரை வடிவமைக்கப்படாத படைப்புகளில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிசைன்களில், கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை மாநகரில், உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பலவிதமான வடிவமைப்புகளுடன் பிரத்தியேகமாகத் தொகுக்கப்பட்ட, திருமண நகை சேகரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெண்கள் தினசரி அணியும் உடைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள நகைகள், பண்டிகை கால படைப்புகளும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. தங்க நகைகளை பரிசோதனை செய்வது போன்று இங்கு வைர நகைகளின் தரத்தை மதிப்பிடு செய்யும் 25 லட்ச ரூபாய் மதிப்புடைய அதிநவீன கருவி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மக்கள் தங்களது வைர நகைகளையும் இங்கு வந்து பரிசோதனை செய்து அதன் தரத்தை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.