சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 10 நாட்களாக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிப்பால் 10.30 மணி அளவில் 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.