தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக முழுவதும் 40 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது . தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்யும் நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை தொடங்கி இருக்கின்றனர். ...

தங்களின் குடும்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு. அரசு கேபிள் நிறுவனத்தை பலிகொடுக்க திமுக அரசு நினைக்கிறது என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில், “தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற திமுக அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமான, எளிய பொது மக்களை வாடிக்கையாளர்களாகக் ...

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள தனுஷ்கோடியில் அமையவுள்ள கடல் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான டெண்டரை தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஒன்றிய எரிசக்தித் துறை சார்பில் ...

தமிழ் சினிமாவின் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனாகவும் தற்போது சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர். இதனிடையே இவர் பதவியேற்றதிலிருந்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். மேலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் திரையரங்கு வினியோகஸ்தர் உரிமையையும் ...

சென்னை: பாஜக சிறுபான்மையினர் அணி நிர்வாகி டெய்சி சரணிடன்,பாஜக ஓபிசி அணி நிர்வாகி திருச்சி சூர்யா தொலைபேசியில் ஆபாசமாக பேசிய விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண்க்கும் OBC அணியின் மாநில ...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ...

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை அடித்துக் கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை – கோவை நீதிமன்றம் தீர்ப்பு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சித்திரைவேல் இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே பகுதியில் அவருடைய அண்ணன் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வெள்ளலூரைச் ...

வனத்துறை எச்சரிக்கை:  அலட்சியப்படுத்தும் தி.மு.க வினர் கோவையில் செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் கோவை மருதமலையில் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் அடிவார பகுதியில் இருந்து மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி இல்லை. காட்டு யானைகள் நடமாட்டம் மற்றும் வன விலங்குகள் அங்கு குடிநீர் மற்றும் உணவுக்காக மருதமலை வனப் பகுதியில் சுற்றி திரிவது ...

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். கோவை கணபதி அருகே உள்ள சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். தொழிலாளி இவருக்கு திருமணம் முடிந்த மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிப் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம் தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் குடித்து வந்துள்ளார். இதற்கிடையே அவர் கடந்த ...

கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் அருகே கடந்த 1-ந் தேதி பதுவம்பள்ளியை சேர்ந்த முகுந்த ராஜேஷ் (வயது 22) என்பவர் தனது 4 நண்பர்களுடன் நடந்து சென்றார். அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சுபாஷ் (22) என்பவர் அவர்கள் மீது உரசியபடி சென்றதாக தெரிகிறது. இதை முகுந்த ...