கோவை பீளமேட்டை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வருகிறார். இவர் கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அந்த கல்லூரி மாணவி கூறியிருப்பதாவது:-
நான் பீளமேட்டில் எனது தாயார், சகோதரி மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறேன். இந்த நிலையில் எனது பாட்டி எனது புகைபடத்தை எடுத்து ஆபாசமாக சித்தரித்து வைத்துள்ளார். அதனை எனது தாயாருக்கு அனுப்பி வீட்டை காலி செய்யுமாறும், எங்கள் உறவினர் மீது உள்ள வழக்கை திரும்ப பெருமாறும், அனைத்து சொத்துக்களையும் பாட்டியிடம் ஒப்படைக்குமாறும் கூறி மிரட்டி வருகிறார்.
இல்லை என்றால் எனது ஆபாச புகை படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பரப்பி விடுவதாக கூறி வருகிறார். எனவே எனது புகை படத்தை காட்டி மிரட்டி வரும் எனது பாட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கல்லூரி மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் கல்லூரி மாணவியின் பாட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply