அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து: கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து: வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நித்தீஸ்குமார் (வயது 24). அவுடேஷ்குமார் (24). கடந்த வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர்கள் செட்டிப்பாளையம் அருகே உள்ள சீராபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். நித்தீஸ்குமார், அவுடேஷ்குமார் ஆகியோர் நிறுவனத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தனர். நேற்று இரவு இவர்கள் 2 பேரும் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மலு மிச்சம் பட்டிக்கு நடந்து சென்றனர். பொருட்களை வாங்கிய பின்னர் மீண்டும் குடியிருப்புக்கு செல்வதற்காக மலுமிச்ச ம்பட்டி- ஒத்தகா ல்மண்டபம் ரோட்டில் நடந்து சென்றனர்.அப்போது அந்த வழியாக அதி வேகமாக வந்த வெள்ளை கலர் கார் வட மாநில தொழிலாளர்கள் நித்தீஸ்குமார், அவுடேஷ்கு மார் ஆகியோர் மீது ேமாதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே நித்திஸ்குமார், அவுடேஷ்குமார் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக பரிதாபமாக இறந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவஇடத்து க்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத காரை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் அடையாளம் தெரியாத கார் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.