புதுடில்லி: மதுபான கொள்கை மற்றும் அதை நடைமுறைப்படுத்தியதில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க, புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை இன்று(அக்.,17) விசாரணைக்கு ஆஜராகும்படி, சி.பி.ஐ., ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. லஞ்ச குற்றச்சாட்டுபுதுடில்லியில் முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு ...

நரபலி கொடுத்த உடல் பாகங்களை விற்பனை செய்தால் நல்ல பணம் கிடைக்கும் என நினைத்து 2 நாட்களாக ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முகமது ஷாஃபி, பத்தனம்திட்டா இலந்தூரைச் சேர்ந்த பாரம்பரிய வைத்தியர் பகவல்சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைது ...

சீனாவில் பல ஆண்டுகளாக ஒற்றை கட்சியின் ஆட்சி முறையே நடந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அதிபர் பதவியை ஏற்று ஆட்சி நடத்தி வருவது வழக்கம். அந்த முறையில், ஒருவர் சீன அதிபராக 10 ஆண்டுகாலம் மட்டுமே பதவிவகிக்க முடியும் என்ற விதியிருந்தது. சர்வாதிகாரத்தை தவிர்க்க இருந்த இந்த விதியினை தற்போதைய அதிபர் ஜி ...

தைவான் மீது படைகளை பயன்படுத்துவது சீனாவின் உரிமை. தைவான் ஜலசந்தியில் பொருளாதார மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை ஊக்குவிக்க தயார். தைவான் மீது படைகளை பயன்படுத்தும் உரிமையை சீனா ஒருபோதும் கைவிடாது என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதிப்பட தெரிவித்துள்ளார். குடியரசு தைவானை சீனா தனது சொந்த பிரதேசமாக கருதுவதாகவும், முறைப்படி தைவான் சீனாவிற்கு சொந்தமான ...

இந்தியா தற்போது உலக அளவில் 3 வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 2028ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியா மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா மிகப் ...

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணை நிரம்பியதையடுத்து கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போது ...

மத்திய அரசின் திட்டம் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்ய ஒரு மாதத்திற்குள் 76 மத்திய அமைச்சர்களும் தமிழ்நாடு வருவார்கள் என அண்ணாமலை பேசியுள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ...

பெய்ஜிங்: சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய ஜி ஜின்பிங் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று தொடங்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ...

எதிர்காலத்தில் தாங்கள் என்னவாக வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் எழுதிய ‘தடையொன்றுமில்லை’ நூல் வெளியிட்டு விழா கோவையில் நேற்று நடந்தது. இதில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ...

சென்னை: போலீஸாரின் செயல் திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று அறிமுகம் செய்து வைத்தார். சர்வதேச தரத்திலான தொழில் நுட்பத்தை புகுத்தி காவல் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ...