வீழ்ச்சி காணும் கச்சா எண்ணெய் – குறையுமா பெட்ரோல், டீசல் விலை..?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையில் இருக்கும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது

கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது சுமார் 50 டாலர்கள் குறைந்து 76 டாலர் என விற்பனையாகி வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது

இந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.