டெல்லி;உத்தரகாண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். 6 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல் இடையே அதிகரித்து வரும் ...
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததால், அதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.அதன் பிறகு தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வந்தார். காங்கிரஸின் மூத்த தலைவர்கள் எவ்வளவோ சமாதானம் படுத்தியும், ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டார். ஆகையால் காங்கிரஸில் தலைவர் ...
அதிமுக தொண்டர்கள் எனக்கு துணை நின்றால் போதும், அதிமுகவை ஒன்றிணைக்கும் வேலையை நான் பார்த்துக் கொள்கறேன் என சசிகலா தெரிவித்தார். அதிமுக 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராமவரம் தோட்டத்துக்கு வந்த சசிகலா, அங்கு எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ...
சென்னை: அலுவல் ஆய்வுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்றும் நாளையும் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அரசு கொறடா கோவி.செழியன், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி ...
கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி ஒருவர் காயம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் இரண்டாவது டிவிசனில் வசித்து வருபவர் சுந்தரம் என்பவரின் மகன் துரைராஜ் வயது 59, இவர் இன்று காலை 6 மணியளவில் தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சி மேற்க் கொண்டு நல்லகாத்து சுங்கம் பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது ...
எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தென்காசி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி இருக்கும் கடையம், செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் ஆண்டுதோறும் பரவுவது வழக்கமாக இருக்கிறது . இந்நிலையில், ...
சென்னை: ஜனவரியில் தமிழகம் முழுதும் பாதயாத்திரை செல்ல, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்ளார்.வெளிநாடுவாழ் பா.ஜ., நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி கூறியதாவது: ‘தமிழகத்தில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக வேரூன்றியுள்ள திராவிட கட்சிகளின் கட்டமைப்பை உடைத்து, அந்த இடத்திற்கு பா.ஜ.,வை கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல. ஆனால், மெல்ல மெல்ல தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வருகிறது’ ...
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை காதலிப்பதாக ஆசை வார்த்தை சொல்லியும் மிரட்டியும் பாலியல் தொல்லை கொடுத்து அவற்றை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த காசி என்கிற சுஜி கைதாகி சிறையில் உள்ளார். தலைமறைவாக இருந்த காசியின் கூட்டாளி கௌதம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். கோழி வியாபாரியான ...
திருவனந்தபுரம்: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் உடலிலும் முக்கிய உறுப்புகள் இல்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே மனித மாமிசத்தை பெங்களூர் மந்திரவாதிகளுக்கு ரூ.20 லட்சத்துக்கு விற்று விடலாம் என்று பகவல்சிங், லைலா தம்பதியை ஷாபி நம்ப வைத்து ஏமாற்றிய தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஷாக்! இனி எந்த படத்திலும் நடிக்க போவதில்லை! தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகின்றது. துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ...