கோவை கருப்பகவுண்டர் வீதியில் உள்ள ” டை” பட்டறையில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக வெரைட்டி ஹால் ரோடு போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக கோபால் ( 67 )அப்பன் சாமி (59) கோவிந்தன் ( 40 ) ...

கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபின் ( வயது 28 )பலியானார் அல்லவா? இந்த சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக முகமது அசாருதீன் (வயது 23) அப்சர் கான் ( வயது 28) முகமது தர்கா (வயது 23) முகமது ரியாஸ் ( வயது 27) பெரோஸ் இஸ்மாயில்( வயது 26) முகமது நவாஸ் இஸ்மாயில்( ...

கோவை உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகம் முன் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 35 வயது இருக்கும் .அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி சம்பவ இடத்துக்கு சென்று ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையின் சூப்பர்வைசராக ஊட்டியை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் நேற்று மதியம் விஜய் ஆனந்த் வழக்கம் போல் கடையில் வசூலான பணம் ரூ.10 லட்சத்தை எடுத்து தனது மொபட்டில் மேட்டுப்பாளையத்தில் ...

கோவை: வடமாநிலங்களில் தொடர் பண்டிகை எதிரொலியாக, வரும், 6, 13, 20 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறியிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:05905), புதன் ...

கோவை பள்ளப்பாளையம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 31). டிரைவர். இவரது அண்ணன் பிரகாஷ் (34). சுமை தூக்கும் தொழிலாளி. இந்த நிலையில் வினோத்குமாருக்கு ஒண்டிப்புதூர் பட்டணம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பிரகாஷ் பலத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனது அண்ணனை ...

கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதனால், அங்கு மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அழிக்க அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், கோவை- கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ...

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 65). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது ராமகிருஷ்ணன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட ...

ட்விட்டர் நிறுவனத்தை நீண்ட இழுபறிக்குப் பின்னர் வாங்கிய எலான் மஸ்க் ட்விட்டரின் ஒற்றை இயக்குநராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார். நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் முழுமூச்சாக செயல்பட்டுவருபவர். இந்நிலையில் அவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீதப் பங்குகளை விலைக்கு வாங்கினார். ...

மோர்பி தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததால் குஜராத் மாநிலம் முழுவதும் நாளை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விழுந்து 134 பேர் உயிரிழந்ததை அடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் நாளை (நவம்பர் 2) துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் தொங்கும் கேபிள் ...