கோவை கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மோசடி- வாலிபர் மீது புகார்..!

கோவையில் பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதற்காக ” பெட்டிஷன் மேளா ” நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு போலீசாரிடம் புகார் மனு கொடுத்தனர். இந்த நிலையில் கோவை சரக டி.ஐ .ஜி..முத்துசாமி நடத்திய முகாமில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதி ( வயது 23) என்பவர் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் பிரதீப் என்பவரிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தவணை முறையில் ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் 3லட்சத்து 75 ஆயிரம் பெற்றுக் கொண்டார்.ஆனால் பூபதி அவருக்கு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவிட்டார். இதையடுத்து அன்னூர் போலீசார் பூபதியிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பூபதி கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூபதியை தேடி வருகிறார்கள்.