ஆந்திர மாநில சொகுசு கார் பெருமாள் கோவில் மீது மோதி விபத்து: கோவையில் பரபரப்பு…
கோவை ஆலந்துறை அடுத்த செம்மேடு கிராமப் பகுதியில் உள்ள பழமையான பெருமாள் கோவில் பூண்டி சாலையில் உள்ளது. இந்த பழமையான பெருமாள் கோவில் மீது தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் மோதியதில் கோவில் சுவர் மற்றும் கருவறைகள் சேதம் அடைந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஆலந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தக் காரில் பயணம் செய்தவர்கள் யார்? என்றும், மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்தனரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்
விபத்து நள்ளிரவில் நடந்து இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்பட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்துக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply