அதிமுகவின் தலைமைப் பதவிக்கு தற்போது தேர்தல் நடைபெற்றாலும் தாம்தான் கட்சியின் ஒற்றை தலைமையாக வருவேன் என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு ...

லாகூர்: இலங்கையை தொடர்ந்து திவாலாகும் நிலைக்கு பாகிஸ்தான் சென்று விட்டது. அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு தத்தளித்து வருகிறது. இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சே குடும்பம் நாட்டை விட்டே ஓடும் அளவுக்கு மக்கள் போராட்டமாக வெடித்தது. அதிபர், பிரதமர் பதவியில் இருந்த அண்ணன், தம்பிகள் இப்போது பதவி ...

உக்ரைன் ரஷ்யா இடையே பல மாதங்களாக தொடர்ந்த வரும் போரில் தற்போது சற்று திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உக்ரைன் அதிபருடன், புடின் பேச்சு வார்த்தைக்குத் தயார் எனத் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை உக்ரைன் ஏற்றுக் கொண்டால் பேச்சு வார்த்தைக்கு ...

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் மிக முக்கியமானவைகளாக, ஜல்லிக்கட்டு காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் ...

பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கும் டோக்கன்: தி.மு.க கட்சியினர் கொடுப்பதாக புகார் – கோவையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பொதுமக்கள் செல்போன் காட்சிகள் வைரல் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ரூபாய் 1000, கரும்பு, அரிசி, மண்டவெல்லம் போன்ற பொருள்கள் ரேஷன் கடையில் ...

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து கடந்த 3-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஜனவரி 10-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய ...

மதுரை: பொது நலன்கருதி டாஸ்மாக் மது விற்பனை வணிக நேரத்தை மதியம் 2:00 முதல் இரவு 8:00 மணி வரை குறைப்பது பற்றி மாநில அரசு பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் 2019 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. மதுவிற்கு ...

தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி என்பது மதத்துக்கு எதிரானது கிடையாது என்றும், மதவாதத்துக்கு மட்டுமே எதிரானது என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 1250 கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் 1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள ...

கோவை சுந்தராபுரம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ராஜ் நாராயணா மில்லில் ஏ.டி.எம்..மையம் உள்ளது. இங்குள்ள அறையின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 4 பேட்டரிகளை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து அதன் பொறுப்பாளர் ராஜ்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ...

கோவை ஆர் ,எஸ் .புரம். தடாகம் ரோடு .ஏ.கே.எஸ். நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி சாந்தி ( வயது 48)இவர் நேற்று அங்குள்ள முதல் வீதியில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 20 கிராம் தங்கச் சங்கிலி பறித்தான் ...