இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களின் ( Electric Two-wheelers) விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் வெறும் 68,324 எலெக்ட்ரிக் டூவீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த நவம்பர் மாதம் 76,163 ஆக உயர்ந்துள்ளது. இது சிறப்பான வளர்ச்சியாகும். இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிக ...

சென்னை: சென்னை மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குளங்களை அமைக்கும் அசத்தலான திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் குளங்களால் மழை நீர் சாலையில் தேங்கும் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதன்முதலாக இந்த குளங்கள் பெரம்பூரில் அமைக்கப்படவுள்ளதாகவும், பின்னர் மற்ற பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் ...

தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்பொழுது பேசிய எஸ்.பி வேலுமணி “உதயநிதியை அமைச்சராக்கியது தான் திமுக செய்த மிகப்பெரிய சாதனை. ஸ்டாலின் எதை செய்ய மாட்டேன் என சொல்கிறாரோ அதை தான் ...

மேற்கு பர்த்வான்: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா நடத்திய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் பாரதிய ஜனதா சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி பங்கேற்றார். அசில்சுவை முன்னாள் மேயர் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில், ஏழை எளிய ...

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இளைஞர் நலத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பதால், இளைஞர்கள், மாணவர்களை சர்வதேச தரத்தில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விளையாட்டுத் துறையில் மாணவ – மாணவிகளை அவர் நிச்சயமாக மேம்படுத்துவார். ரூ.600 ...

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றம் நடைபெற்று வந்தாலும், ...

உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமாக இருக்கும் கூகுள்-ன் அடுத்தகட்ட வளர்ச்சி இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளை அடிப்படையாகக் கொண்டது தான். இந்த நிலையில் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் ஏற்கனவே இந்தியாவில் பல பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய அறிவிப்புகள் வெளியிட்டு இருந்தாலும் அதில் அடுத்தகட்டமாக இந்தியாவில் தனது முக்கியமான கன்ஸ்யூமர் ...

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர். திருமலையில் உள்ள டீ.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கிய நடிகர் ரஜினிகாந்த் அதிகாலையில் மகள் ஐஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவர்களை தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி வரவேற்றார். பின்னர் வேத பண்டிதர்கள் ...

கோவை கணபதி ஆறு புளியமரம் ,ராஜீவ் காந்தி ரோட்டை சேர்ந்தவர் சுரேந்திரன் .இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 36) இவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள இக்கரைபோளுவாம்பட்டியில் வசிக்கும் இவரது தாயார் வசந்தி (வயது 52)சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தனது மகள் சாவில் ...

கோவை -போத்தனுார் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை டிச.16 -ந்தேதி மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை -கோவை விரைவு ரயில் (16722) போத்தனுார் வரை மட்டும் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் கோவை – மதுரை விரைவு ரயிலும் (16721) நாளை டிச., 16 ல் போத்தனுாரில் இருந்து ...