கோவை: அன்னூரில் டிட்கோ தொழிற்பூங்கா அமைக்க அரசு நிலங்களை கைகப்படுத்தும் என்று அறிவித்தது. இதற்கு அன்னூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் விவசாயிகளின் நிலம் அவர்களது அனுமதி இல்லாமல் எடுக்கப்படாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். இதனிடையே நமது நிலம் நமது போராட்டக்குழு தலைவர் குமார் ரவிக்குமார் மற்றும் ...

ஊட்டி: உடல்நிலை சரியில்லாததால் இலாகாவை மாற்றித் தருமாறு முதல்-அமைச்சரிடம் கேட்டதால் தனக்கு சுற்றுலாத்துறையை ஒதுக்கியதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊட்டியில் உள்ள தமிழக விருந்தினா் மாளிகையில் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் தொழிலாக சுற்றுலாத் துறை உள்ளது. குறிப்பாக நாட்டிலேயே அதிக ...

கோவை: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத் துறை சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவையில் 33 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் பெற முடியாமல் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். வங்கி கணக்குடன் ஆதார் ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள செந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் ( வயது 49 )இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் நேற்று அன்னூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட 25 பாக்கெட் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ...

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு உற்பத்தியாகும் செவ்விளநீர், பச்சை நிற இளநீர்களை தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களான சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் தேவை ...

கோவை பீளமேடு காந்திமா நகர், எப்.சி.ஐ. ரோட்டை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் அர்ஜுன் (வயது 17) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.அதே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் தங்கி இருந்தார் . 3 நாட்களாக உடல்நிலை சரியில்லை .இதனால் கல்லூரிக்கு செல்லவில்லை. ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் பீட்சா கடை ஒன்றில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இந்தநிலையில் அதே கடையில் மேலாளராக வேலை பார்க்கும் ஊட்டியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க நபர் இளம்பெண்ணை தனது ஆசைக்கு இணங்கும்படி அழைத்து வந்தார். நாளுக்கு நாள் ...

கோவை ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 12ஆம் தேதி ஒருவர் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கி இருந்த அறையின் கதவு 3 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஒருவர் விஷம் ...

கோவை செட்டிபாளையம் போலீசார் நேற்று கொச்சி -சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒண்டிப்புதூர் சுங்கம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் பாரதிராஜா ( ...