கேரளா லாட்டரி டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு: கோவையில் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழகத்தில் ஏழைகளின் துயர் போக்க லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு தடை விதித்தது தமிழக அரசு. ஆனால் தற்பொழுது உள்ள காலமாற்றத்தின் வளர்ச்சியின் காரணமாக மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது லாட்டரி டிக்கெட்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் லாட்டரி சீட்டு விற்பனையில் இருந்த போது பல்வேறு குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்தது பல குடும்பத்தனர். வறுமையின் பிடியில் சிக்கிய தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வந்தது. இந்நிலையில் இதை கருத்தில் கொண்ட அரசு தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதித்தது. இந்நிலையில் தற்பொழுது வளர்ந்து வரும் சமூகத்தில் ஆன்லைன் வளர்ச்சி காரணமாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை மீண்டும் வர துவங்கி உள்ளது. மேலும் டிக்கெட் விற்பனை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஆன்லைன் லாட்டரி டிக்கெட்கள், சூதாட்டங்கள் தற்பொழுது இளைஞர்களை சீரழித்து தற்கொலை சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் இது போன்ற சூதாட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளமான facebook குழுவில் நபர் ஒருவர் கேரளா லாட்டரி டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு உள்ளது என்றும் அவர் தொலைபேசி எண் ஒன்றை பதிவு செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அரசு விழிப்புணர்வுகளையும் விளம்பரமும் ஏற்படுத்தி வருகின்ற நிலையில் சமூக வலைதளங்களில் இதுபோன்ற பதிவு செய்வோம் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீண்டும் ஆன்லைன் லாட்டரிகள் வராமல் தடுக்க முடியும் என்பதை அனைவரின் கருத்தாக உள்ளது. இதன் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.