அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள்: அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அவலம்

அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள்: அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அவலம்

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழமை வாய்ந்த அவினாசிலிங்கேஸ்வரர் பெரிய கோவிலில் சுமார் 80 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை கோவில் பராமரிப்பு என்ற பெயரில் சேதப்படுத்தி உள்ளனர். இதை தடுக்க வேண்டிய கோவில் அரசு நிர்வாகிகள் அதனை தடுத்து நிறுத்தி பாதுகாக்காமல் அலட்சியமாக உள்ளனர். மேலும் அங்கு வரும் பக்தர்கள் அரச மரத்தின் அடியில் அமர்ந்து இருக்கும் பிள்ளையாரை வணங்கினால் வேண்டிய வரம் அப்படியே கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. அப்படி இருக்கின்ற சூழ்நிலையில் அரசின் நிர்வாகத்தின் வரும் இந்தக் கோயிலை அரசு அதிகாரிகள் மரத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மரங்களை பாதுகாக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளும் எடுத்து வரும் நிலையில் கோவிலை நிர்வாகம் செய்யும் அரசு ஊழியர்கள் அரசு அறிவித்துள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் அனுமதியும் பெறாமல் இதுபோன்று பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாகவும், மரங்களை வெட்டுவதை தவிர்க்க அரசு எடுத்து வரும் முயற்சிகள் விழிப்புணர்வுகளை மதிக்காமல் செயல்படும் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.