சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,430 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 238 வாக்குசாவடிகளிலும் வாக்களிப்பதை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய விவிபிடி 310 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்கு சாவடியில் மட்டும் 1,260 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி ...

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடைபெறும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். நேரடியாக திமுகவினர் செய்யும் விதி மீறல்கள் குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும். ...

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை மதிப்பதாக இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியனின் தூதர் உகோ அஸ்டுடோ தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பான தீர்மானம் குறித்து ஐநா சபையில் இந்தியா புறக்கணித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘இது போருக்கான நேரம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலத்திற்கு ...

ஒ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.24) காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. பழனியம்மாளின் இறப்புக்கு தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். தாயாரின் மறைவு செய்தி கேட்டதும் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து தேனி பெரியகுளத்துக்கு சென்றார். ...

தாங்க முடியாத கடன் சுமை பல நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்துவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். தாங்க முடியாத கடன் சுமை பல நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்துவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். கா்நாடக மாநிலம் பெங்களூரில் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்களின் கூட்டம் 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி ...

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் காலிஸ்தான் எனப்படும் சீக்கியர்களுக்கான தனிநாடு கோரும் அமைப்பின் குரல் வலுவாக ஒலிக்கிறது. காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஒன்று கூடுதல் போன்ற நிகழ்வுகள் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாத குரல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 1980களில் நாளேடுகளின் தலைப்பு செய்திகளில் பிரதான இடம்பெற்றது ...

அபுஜா: இந்தியாவில் கருப்பு பணம், ஊழலை ஒழிப்பதாக கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த 2016ல் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதேபாணியில் தற்போது நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நிலையில் அந்தநாட்டு மக்கள் வங்கி, ஏடிஎம் மையங்களை சூறையாடி, தீவைத்து வருகின்றனர். வரும் 25ம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் போராட்டம் ...

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் மற்றும் தண்டனையின்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘இரண்டு நாட்கள் தீவிர விவாதங்களுக்குப் பிறகு, மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரே பாதை சமாதானப் பாதைதான் என்று நாம் அனைவரும் ஒப்புக்கொண்ட நேரத்தில், இதுபோன்ற விரும்பத்தகாத ...

சென்னை: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக அக்கட்சியானது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகி இருக்கிறது என்பது அவரது ஆதரவாளர்களின் மகிழ்ச்சி. ஆனால் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக் அப்படி எல்லாம் இபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைய ...

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் இன்று காங்கிரஸ் மாநாடு துவங்க உள்ளது. இதில்,எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் காங்கிரஸ் கூட்டணி திட்டம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா ...