பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ நேற்று இந்தியாவின் கோவாவுக்கு வந்தார். கடந்த 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் ...
தி கேரளா ஸ்டோரி’ வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா். இயக்குநா் சுதீப்டோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் வெள்ளிக்கிழமை (மே 5) வெளியாகிறது. முன்னதாக, வெளியான இந்தப் படத்தின் ‘டீசரில்’ கேரளத்தில் இருந்து இளம் பெண்கள் மாயமாவது போன்றும், ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் மதுபான கடை மற்றும் மலை கிராமங்களில் இரண்டு கோவில்களில் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடியில் இருந்து பாரதிபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுபான கடையில் சூப்பர்வைசராக பாலமுருகன், விற்பனையாளராக சக்கரபாணி ஆகியோர் ...
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 6-ஆம் தேதி வாக்கில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் 7-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த ...
அதிமுகவுக்கு திரும்பி வர ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் ...
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. டோர்பாங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே வன்முறை நடந்துள்ளது. இதை தொடர்ந்து மணிப்பூரின் ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன் பொது மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இந்த தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தில் பத்து ரூபாய் நாணயத்தை செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும் பணிகளை துவக்கி வைத்தார். இந்த மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தில் போன் பே பே டி ...
தீட்சிதர்கள் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக ஆளுநர் எழுப்பிய புகார் குறித்து தமிழக தலைமை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. கடந்த அக்டோபர் மாதம் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சிலர் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக, சிறுவர் – சிறுமியர் திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது ...
நகர்ப்புறங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அடியோடு அகற்றுவதே தமிழக அரசு கொண்டுவந்த சாத்தியத்தின் நோக்கம் என்று கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப்பலகைகள் குறித்த, அரசின் நிலைப்பாடு மற்றும் உண்மைத்தன்மையை விளக்கும் அறிக்கையை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமை பாளையம், மேல் தெருவை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி ( வயது 53) இவர் ஒடந்துறை ஊராட்சி 7 -வது வார்டு கவுன்சிலராக உள்ளார் .இவரது மனைவி கமலா. இவர்களது வீட்டின் பின்புறம் வசிப்பவர் யுவராஜ் .பைக் மெக்கானிக். இவரது மனைவி நந்தினி நேற்று யுவராஜ் குடிபோதையில் தனது கர்ப்பிணி ...













