வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைப்பு … இனி இதிலும் குவிய போகுது கூட்டம்.!!

சென்னை: வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ஏழை மக்களும் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் சாதாரண் என்ற ரயில் விடப்பட உள்ளது.

வந்தே பாரத் சாதாரண் ரயில் என்பது சாதாரண மக்கள் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் என்பதை குறிப்பது ஆகும். இதில் ஏசி இல்லாத 24 கோச்சுகள் கொண்ட சேவை தொடங்கப்பட உள்ளது. தற்போது இருக்கும் வந்தே பார்த் ரயிலில் உள்ளது போன்ற அதே வசதிகள் இதிலும் இருக்கும்.

அதாவது மாடர்ன் தோற்றம், உள்ளே பயோ டாய்லெட், தானாக மூடும் கதவும், அதிக வேகம், சிசிடிவி கேமரா, சுத்தம் என்று எல்லா வசதிகளும் இருக்கும். அதேபோல் புக்கிங் செய்தால் மட்டுமே பயணம் என்ற நிலையும் இருக்கும். ஆனால் இதில் ஏசி இருக்காது. இதனால் கணிசமான கட்டணம் குறையும்.

செலவு அதிகமாக குறைவதால் டிக்கெட் கட்டணம் பாதிக்கு பாதி குறையும். இந்த சாதாரண் ரயிலில் ஜன்னல்கள் திறக்கும் வகையில் இருக்கும். இதனால் ஏசிக்கு பதிலாக வெளிக்காற்று உள்ளே வரும். வந்தே பாரத் ரயிலில் கட்டணம் அதிகம் இருப்பதாக புகார் வைக்கப்பட்ட நிலையில் வந்தே பாரத் சாதாரண் ரயில் கொண்டு வரப்பட உள்ளது.

இதில் ஒரு ரயிலை உருவாக்க 65 கோடி ரூபாய் வரை செலவு ஆகும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் இரண்டு பக்கமும் எஞ்சின் கொண்ட ரயிலாக இது இயங்கும். ஒரு எஞ்சின் புல் செய்யவும், இன்னொரு எஞ்சின் புஷ் செய்யவும் பயன்படும். இதனால் ரயிலின் வேகம் மிக அதிகமாக இருக்கும்.

இன்னொரு பக்கம் விஜயவாடா மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த புதிய சேவை ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்படும். ஜூலை 8 முதல் பயணிகளுக்கு சேவை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக சென்னைக்கு வந்து அதே வழியில் திரும்பும். விஜயவாடா மற்றும் சென்னை இடையே நகரங்களுக்கு இடையேயான ரயிலின் பயண நேரம் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரயிலால் 20 நிமிடங்கள் பயணம் குறையும். சென்னை டூ திருப்பதிக்கு ரயில் வரப்போவதாக செய்திகள் வந்த நிலையில்தான் இந்த விஜயவாடா ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆனால் இதன் வேகம் மிக மெதுவாக இருக்க போவதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில் 6.5 மணி நேரத்தில் பயண காலத்தை முடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே விஜயவாடா – சென்னை இடையே இயங்கும் ரயில்கள் எல்லாம் வெறும் 5.30 மணி நேரத்தில் பயண காலத்தை நிறைவு செய்கின்றன.

இப்போது என்று இல்லை கடந்த 40 ஆண்டுகளாகவே இந்த ரயில்கள் 5.30 மணி நேரத்தில் பயணத்தை நிறைவு செய்கின்றன. அப்படி இருக்கும் நிலையில் இப்போது வந்தே பாரத் ரயில் இதே தூரத்தை கடப்பதற்கு 1 மணி நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்வது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை – கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை – கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.

அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.

இதேபோல் இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய ‘வந்தே பாரத்’ ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கே ரயில்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய ‘வந்தே பாரத்’ ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக திருநெல்வேலி – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் படுக்கை வசதியுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.