சூடானில் சிக்கியுள்ள குடிமக்களைக் காப்பாற்ற பெரிய நாடுகள் கூட முயற்சி செய்யாதபோது இந்தியா அதனை செய்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பல்லாரியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, பெரிய நாடுகள் கூட தங்கள் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஆனால் இந்திய அரசு அந்த முயற்சிகளை தொடர்ந்து செய்து ...
சென்னை: வரும் 7ஆம் தேதி அல்லது 8ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று சேலம் நாமக்கல் மற்றும் ...
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில் கார் பார்க்கிங் வளாகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் வெள்ளை நிற காரில் வந்துள்ளனர். காரை நிறுத்திவிட்டு சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அக்காரில் பயங்கர ஆயுதங்களுடன் கடத்தல் கும்பல் வந்திருக்கலாம். இவர்கள் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும் தகவல் பரவியது. இதையடுத்து மத்திய புலனாய்வு துறை போலீசார் ...
ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான். மறக்க முடியாத குரல் இது; 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மக்கள் பணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன்; மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா? என என்னை நானே கேட்டுக்கொண்டபோது ...
குறைந்தது 20 மில்லியன்’ மக்களைக் கொன்று போட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதார நெருக்கடி என்ற கட்டத்தை தாண்டி விட்டதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில் அவர் இது தொடர்பாக விரிவாக தெரிவித்துள்ளார். COVID-19 தொற்றுநோய், மூன்று ...
கோவை மே 6 மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது .இதில் கோவை மாவட்டத்தில் 7,127 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள் .இதற்காக 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வு மையங்களுக்கு தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த தகவலை நீட் ...
கோவை வெரைட்டி ஹால் ரோடு, தாச கவுண்டர் வீதியை சேர்ந்தவர் நாக செல்வம் (வயது 36) நகை தொழிலாளி.இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் நீரழிவு ரத்த அழுத்தம் நோயால் அவதிப்பட்டு வந்தார் .இதற்கு மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த நாக செல்வம் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...
கோவை சிங்காநல்லூர், வசந்தா மில் ரோட்டை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48) மளிகை கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று தனது மனைவியுடன் மருதமலை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக கோவிலுக்கு நடந்து சென்றனர்.வழியில் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.மயங்கி விழுந்தார் . அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ...
கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர்கள் ராமசாமி, சூர்யா மணி என்ற சவுந்தர்ராஜன். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சோமனூர் செந்தில் நகரில் ஜவுளி தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இங்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு ...
கோவை குனியமுத்தூர் ,சுப்பு பிள்ளை வீதியில் நேற்று ஒருவர் தலையில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர் குனியமுத்தூர் சுப்பு பிள்ளை வீதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 42) என்பது ...













