பணம் கொடுத்தால்தான் இலவச மின்சாரம் கிடைக்கும்… அதிகாரிகளின் அடாவடி- கதி கலங்கி நிற்கும் நெசவாளர்கள்.!!

திண்டுக்கல் மாவட்டம், நாகல்நகர், பாரதிபுரம், வேடப்பட்டி பகுதிகளில் தறி மூலம் நெசவு செய்யக்கூடிய சௌராஷ்டிரா மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியாக உள்ளது.

நெசவாளர்களுக்கு தமிழக அரசு இலவசமாக 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மாதாந்திர மின்கட்டணத்தை கணக்கிட வரக்கூடிய கணக்கீட்டாளர் பாலமுருகன் மற்றும் உதவி பொறியாளர் சின்ன பூசாரி என்பவர் அளவிற்கு அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துகிறீர்கள் என்கின்ற முறையில் உங்களுக்கு வழங்கக்கூடிய இலவச மின்சாரத்தை துண்டிப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளனர்.

மேலும் அப்படி இலவச மின்சாரத்தை துண்டிக்காமல் தொடர்ந்து நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் எங்களுக்கு பணம் தர வேண்டும் என மிரட்டடி வருவதாக கூறி திண்டுக்கல் நாகல்நகர், பாரதி புரம் பகுதியைச் சேர்ந்த நெசவாளர் மக்கள் 20க்கும் மேற்பட்டோர் பணம் கேட்டு மிரட்டும் மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெசவுத் தொழில் தற்போது நலிவடைந்து வரும் நிலையில் எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த இதுபோன்ற அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்வை இழக்கும் சூழ்நிலையை தடுத்து நிறுத்த வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்..