கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் உருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை… போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி – வீடியோ இணைப்பு..!!

கோவை: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி. ஐ. ஜி விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோவை வந்தார்.

தற்கொலை குறித்து நேரில் ஆய்வு செய்தார் .விசாரணையும் நடத்தினார்.இரவில் காவலர் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.இன்று காலை 9 மணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சுதாகர்மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கமிஷனர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டி.ஐ.ஜி. விஜயகுமார் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் ஐ.ஜி சுதாகர் மற்றும் துணைபோலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டி.ஜ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.இவர் மன அழுத்தத்தில் இருப்பதை அறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி .சுதாகர், எஸ். பி. பத்ரிநாராயணன் ஆகியோர் அவருக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

முதல் நாள் இரவே தனது பாதுகாவலர் ரவிச்சந்திரனிடம் துப்பாக்கியை எப்படி பாதுகாப்பாக வைப்பீர்கள்? எப்படி இயக்குவது? என்றெல்லாம் கேட்டுள்ளார்.
அப்போது பாதுகாவலர் ரவிச்சந்திரன் துப்பாக்கியை எடுத்துக் கொடுத்துள்ளார். துப்பாக்கியில் குண்டுகள் லோடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை வழக்கம் போல் எழுந்து யோகா பயிற்சி மேற்கொண்டார். பிறகு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் .டி .எஸ் ஆர். (தினசரி நிலவரம்) எனப்படும் அறிக்கையை பார்வையிட்டு இருக்கிறார்.

அதன் பிறகு காலை 6 – 50 மணி அளவில் வெளியில் வந்தார்.ஒருவித பதட்டத்துடன் போட்டி க்கோவில் அங்கும் இங்கும் நடந்தார். பின்னர் காவலர் ரவிச்சந்திரனிடம் துப்பாக்கியை வாங்கி தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.விஜயகுமார் மன அழுத்தத்துடன் இருந்துள்ளார்.இதற்காக ஒரே மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் வெவ்வேறு மருத்துவரிடம் மாறி மாறி ஆலோசனை பெற்று வந்துள்ளார்.வெவ்வேறு பாதிப்புகளுக்கு என்ன வகையான மருத்துவம் பார்ப்பது சித்த மருத்துவம் பார்ப்பது மருந்து மாத்திரை உட்கொள்வது என சுயமாக குறிப்புகளை தயார் செய்து வைத்திருக்கிறார் .சமூக வலைத்தளங்களில் விஜயகுமார் இறப்பு குறித்து தவறான தகவல் களைபரப்புவதை தவிர்க்க வேண்டும். இவைகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்..