திண்டுக்கல்: பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகளை அரைத்து கூழாக்கி உரம் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.. இதற்காக, சென்னையில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் அதிகளில் பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் ...

சென்னை: மணிப்பூரில் மோரே பகுதியில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் திரும்ப விரும்பிய 5 மாணவர்களுக்கு விமான டிக்கெட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல், அங்குவசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற ...

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ‘தக்ஷா’ என்ற பெண் சிவிங்கிப் புலி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. குனோ தேசிய பூங்காவில் கடந்த 42 நாள்களில் உயிரிழந்த 3-ஆவது சிவிங்கிப் புலி இதுவாகும். இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்கீழ், ...

தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுவதால் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் ...

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. நீலகிரியில் 41 மையங்களில் தேர்வு நடந்தது. மார்ச் 27ம் தேதி கடந்த கணித தேர்வின்போது ஊட்டி அருகே அரசு உதவிபெறும் பள்ளியான சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் மாணவ, மாணவிகள் சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ...

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் 400க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய கள்ளழகர் நேற்று காலையில் அழகர்மலையிலுள்ள கோயிலை சென்றடைந்தார். கோயிலுக்குள் நுழைந்த கள்ளழகருக்கு 21 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி திருஷ்டிக் கழித்தனர். அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி திருவீதி ...

ஈரோடு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலைப் பணியாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பதவி உயர்வு, முன்னுரிமை பட்டியல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கோபியில் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ...

தமிழ்நாட்டில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பரவலான ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து தூக்கப்படுவார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சில அமைச்சர்கள் நீக்கப்படுவர் எனத் தகவல் வெளியானது. இது அரசியல் ...

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பானது நீதிமன்றத்தை சாதாரண மக்களின் வீடுகள் மற்றும் இதயங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தியாவில் தன்பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு ...

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் ( வயது 49) கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 38) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் முத்துலட்சுமிக்குஅதே பகுதியில் வசித்து வந்த மாணிக்கம் என்பவருடன் காதல் ஏற்பட்டது.இதைய டுத்து முத்துலட்சுமி தனது கணவரை விட்டு பிரிந்து மாணிக்கத்துடன் கோவை போத்தனூர் ...