கோவையில் கரும்புக்கடை ,சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதை வருகிற 26 ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைக்கிறார். இதையடுத்து இந்த புதிய போலீஸ் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கோவை ஆர். எஸ். புரம்,போலீஸ் ...
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கவுள்ளனர். அதன்படி, ஆர்.சக்திவேல், கே.ராஜசேகர், பி.தனபால், சின்னசாமி குமரப்பன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். கடந்த ...
மும்பை நாக்பூர் ஓல்டு ஹைவேயில் இன்று காலை ஏழு மணியளவில் ஏற்பட்ட பஸ் – டிரக் மோதலில் ஏழு பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிந்த்கேடராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த சிறிது நேரத்தில் எமர்ஜென்சி சேவை துரிதமாக செயல்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தது. மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் புனேயிலிருந்து மெஹேகர் ...
கோவை துடியலூரை அடுத்த எண்.22 நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடையை திறந்தால் மனித-விலங்கு மோதல் அதிகரிப்பதோடு, உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கலால் துணை ஆணையருக்கு வனத்துறை பதில் அளித்துள்ளது. கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் நடமாடும் பகுதியான எண்.22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, வரப்பாளையம் சாலை, ...
இன்று முதல் வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப ...
தமிழ்நாட்டை 2030-31ம் நிதிஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக உயர்த்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையொட்டி, தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 ...
சுப்மன் கில் சகோதரியின் பதிவில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ...
கேரள மாநிலத்தில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் ஏராளமான யூத இனத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். தற்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் காட்சிக்கூடங்களாக மாறிவிட்ட காரணத்தினால் இங்குத் திருமணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை. இந்நிலையில் கொச்சியைச் சேர்ந்த முன்னாள் காவல் அலுவலர் மகள் மஞ்சுளா மரியம் இமானுவேலுக்கும், அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்ட் ரோவுக்கும் ...
நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை : 5 பேர் கைது – 8 பேருக்கு வலைவீச்சு.!! மதுரை மாவட்டத்தில் உள்ள அனுப்பானடிபகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் பாபி கார்த்திக். இவர் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த ராமர்பாண்டியன் மதுபோதையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து பாபி கார்த்திக்கிடம் தகராறு ...
கோல்பரா(அஸ்ஸாம்): அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஏராளமான இருமல் மருந்து பாட்டில்களை மாநில போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கோல்பாரா மாவட்டத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளர் அனுராக் சர்மா கூறியதாவது: அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் இருமல் மருந்து ...













