கோவையில் இருந்து சென்னை நெல்லை மும்பை உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கோவையில் இருந்து சென்னை சேலம் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட ஆறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கோவை, பெங்களூரில் இடையே ஒரே ஒரு பகல் நேர உதய எக்ஸ்ப்ரஸ் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ...

கோவை கணபதியை சேர்ந்தவர் டெனிசன் ( வயது 45) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஜூசர்சைபுதீன் ( வயது 69)) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் டெனிசனிடம் தான் பீளமேட்டில் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருவதாகவும் இதில் முதலீடு செய்தால் மாதம் 13 சதவீதம் வட்டி தருவதாகவும் ...

ரேஷன் கடைகளில் நுகர்வோரின் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி மற்றும் தொலைபேசி எண்களை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு கூறும் போது:- பல லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் மூலம் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் தரம் ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களால் முருகப் பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். எனவே பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டு ...

கோவை ஆர். எஸ். புரம் கென்னடி தியேட்டர் வளாகத்தில் பால் பண்ணை நடத்தி வருபவர் ஜனார்த்தனன் என்பவர் மனைவி அபிநயா. பிரபல பால்பண்ணை உரிமையாளரான அபிநயாவிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள கென்னடி தியேட்டர் வளாகத்திற்கு சொந்தக்காரர் என்று கூறி மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் ...

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பாஜக கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றான பனிமய மாதா பேராலயத்திற்கு சென்றார். ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பேனர் சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சாலையோரம் பெரிய விளம்பர பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இந்த விளம்பரப் பலகை விழுந்ததில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது பற்றி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அதில், ...

தமிழ்நாட்டில் உள்ள கோவில் திருவிழாக்களில் காலம் காலமாக கலாச்சார ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதை தவிர்த்து வந்தனர். இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க ...

சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இதில், சதிஷ் உட்பட 9 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆணவகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு, மதுரை ...