ரேஷன் கடையில் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும் புகார் பெட்டி.!!

ரேஷன் கடைகளில் நுகர்வோரின் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி மற்றும் தொலைபேசி எண்களை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு கூறும் போது:-

பல லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் மூலம் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் தரம் இல்லாமல் இருந்தாலோ, முறையாக பொருட்கள் வினியோகம் செய்யப்படாமல் இருந்தாலோ, துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அதற்கு ஏற்ப ரேஷன் கடைகள் முன்பு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர், சிறப்பு பறக்கும் படை வட்டாட்சியர் ஆகியோர் தொடர்பு எண், கட்டணமில்லா தொலைபேசி எண் ஆகியவற்றை தகவல் பலகையில் எழுதி பொதுமக்கள் பார்வை படும் படி வைத்து இருக்க வேண்டும். பொதுமக்கள் பார்வையில் பயன்படும்படி புகார்கள் பெட்டியை வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் புகார் அளிக்க வேண்டிய அதிகாரிகள் எண்கள், கட்டணமில்லா தொடர்பு எண் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையில் படும்படி வைப்பதில்லை, சில கடைகளில் இந்த பலகையே இருப்பதில்லை, புகார் பெட்டிகள் பெயரளவுக்கு கடைகளில் ஒரே ஏதோ ஒரு இடத்தில் பொருத்துகின்றனர். அதைக் குறிப்பிட்டு நாட்களுக்கு ஒரு முறை திறந்து புகார் கடிதம் ஏதேனும் வந்து உள்ளதா ? என்றும் பார்ப்பதில்லை இதை நிவர்த்தி செய்ய அரசு நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.