ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை டீச்சர்ஸ் காலனியில்
நூற்றுகணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியருப்புகளை
சுற்றி பல கடைகள் உள்ளது.

மேலும் இந்த டீச்சர்ஸ் காலனி பகுதி கோவை- மேட்டுப்பாளையம் செல்லும்
முக்கிய சாலை ஆகும். எனவே அந்த பகுதியில் அதிக மக்கள் பயன்பாடு உள்ளதால்
மக்கள் அந்த பகுதியில் ஏ.டி.எம் எந்திரம் வைக்க கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மேட்டுப்பாளைத்தில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி கிளை அந்த
பகுதியில் ஏ.டி.எம் மையத்தை அமைத்தது. பொதுமக்கள் அதிகளவில் அந்த
ஏ.டி.எம்.மை பயன்படுத்தி வந்தனர். இதனால் அந்த ஏ.டி.எம்.மில் எப்போதும் அதிகளவில் பணம் இருக்கும். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த ஏ.டி.எம்.க்கு மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததை பார்த்தார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை வைத்து ஏ.டி.எம் எந்திரத்தை
உடைத்தார். இதனால் எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருந்த அலாரம் ஒலித்தது.
மேலும் வங்கி மேலாளருக்கு மெசேஜ் சென்றது. அலாரம் சத்தத்தை கேட்டு
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் மேலாளர் இதுகுறித்து காரமடை போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், தனிப்பிரிவு போலீஸ் விவின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
பணம் தப்பியது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவாகி இருந்த மர்மநபரின் உருவத்தை கைப்பற்றினர். இதையடுத்து
போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர் யார் என விசாரணை நடத்தி
தேடி வருகின்றனர். ஏ.டி.எம்.மில் அலாரம் ஒலித்ததால் பணம் தப்பியது.