ஒரு தலை காதலால் வடமாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை:
அசாமை சேர்ந்தவர் உமேஷ்பொன்னியா (வயது 19). இவர் கடந்த ஒரு வருடத்துக்கு
முன்பு குடும்பத்துடன் கோவை வந்தார். இங்கு சூலூர் பாப்பம்பட்டி
பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி அங்கு வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் உமேஷ்பொன்னியா ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த
பெண்ணிடம் அவர் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண் அவரது
காதலை ஏற்க மறுத்து விட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்துள்ளார். அப்போதும் அந்த பெண் அவரது காதலை ஏற்க வில்லை. இதனால் உமேஷ்பொன்னியா மனவேதனையுடன் இருந்து வந்தார்.
சம்பத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத
நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு
திரும்பிய குடும்பத்தினர் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி
அடைந்து கதறி அழுதனர்.

பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர். ஒரு தலை காதலால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.